அவிநாசி அருகே சுதந்திரநல்லுாரில் வசித்து வருபவர் புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் பகுதியைச் சேர்ந்த சூர்யா, 28. இவரது மனைவி சுரேகா, 26. கடந்த 4ம் தேதி சூர்யா பக்கத்து வீட்டில் குடியிருக்கும் தனது நண்பரான சாக்ரடீஸ் என்பவரது டூவீலரை வாங்கிக் கொண்டு கடைவீதிக்கு சென்று வருவதாக கூறியுள்ளார்.
அவிநாசியில் இருந்து தெக்கலுார் செல்லும் சர்வீஸ் ரோட்டில் சூர்யா ஓட்டிச்சென்ற டூவீலர் மற்றும் தெக்கலுார் ஆலம்பாளையத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் ஓட்டி வந்த டூவீலரும் நேருக்கு நேர் மோதியதில் சூர்யாவுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. திருப்பூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட சூர்யா சிகிச்சை பலனின்றி சூர்யா உயிரிழந்தார். அவிநாசி போலீசார் விசாரிக்கின்றனர்.
ஆம்புலன்ஸ் மோதி பெண் பலி
வெள்ளகோவில், புதுப்பையை சேர்ந்தவர் மலையப்பன், 64. இவரது மனைவி முத்துமணி, 57. இருவரும் நேற்று முன்தினம் இரவு டூவீலரில் வெள்ளகோவில் மூலனுார் ரோட்டில் நின்று கொண்டிருந்தனர். அவ்வழியாக வந்த ஆம்புலன்ஸ் வாகனம் டூவீலர் மீது மோதியது. இருவரும் படுகாயமடைந்தனர். காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். பரிசோதனையில், முத்துமணி இறந்தது தெரிந்தது. மலையப்பன் ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார். வெள்ளகோவில் போலீசார் விசாரிக்கின்றனர்.
கஞ்சா விற்ற வாலிபர் கைது
திருப்பூர் தெற்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட முத்தையன் கோவில் பகுதியில் போலீசார் ரோந்து மேற்கொண்டனர். சந்தேகப்படும் விதமாக நின்றிருந்த நபரிடம் விசாரித்தனர். திருப்பூர், அய்யம்பாளையத்தை சேர்ந்த பாண்டியன், 38 என்பதும், இரண்டு கிலோ கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருப்பதும், ஒடிசாவை சேர்ந்த வாலிபரிடம் விற்பனைக்காக வாங்கி வந்தது தெரிந்தது. வாலிபரை கைது செய்து, கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
'குடி' போதையில் தகராறு
பல்லடம் அடுத்த, சேகாம்பாளையத்தை சேர்ந்தவர் முருகன், 21. திருப்பூர் வீரபாண்டியை சேர்ந்தவர் கிருஷ்ணன், 29. இருவரும் ஒர்க்ஷாப் ஊழயிர்கள். தெற்குபாளையத்தை சேர்ந்தவர் மகேஸ்வரன் 25; கூலி தொழிலாளி. மூன்று பேரும் நேற்று மாலை, பல்லடம் அடுத்த, தெற்குபாளையம் பிரிவில் பேசிக்கொண்டிருந்தனர்.
அங்கு, குடிபோதையில் இருந்த இருவர், முருகனிடம் பிரச்னையில் ஈடுபட்டனர். தொடர்ந்து, முருகனை விரட்டி தாக்கினர். அவருடன் இருந்த கிருஷ்ணன், மகேஸ்வரன் தடுக்க முயற்சிக்க அவர்களையும் தாக்கினர். இதில், படுகாயமடைந்த கிருஷ்ணன், முருகன், மகேஷ்வரன் ஆகியோர் பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து, தாக்குதலில் ஈடுபட்ட போதை ஆசாமிகள் இருவரையும் தேடி வருகின்றனர்.