/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொள்ளாச்சி மாவட்டமே போதுங்க! விவசாயிகள் சங்கம் முதல்வருக்கு மனு
/
பொள்ளாச்சி மாவட்டமே போதுங்க! விவசாயிகள் சங்கம் முதல்வருக்கு மனு
பொள்ளாச்சி மாவட்டமே போதுங்க! விவசாயிகள் சங்கம் முதல்வருக்கு மனு
பொள்ளாச்சி மாவட்டமே போதுங்க! விவசாயிகள் சங்கம் முதல்வருக்கு மனு
ADDED : மார் 09, 2025 11:01 PM
உடுமலை; 'உடுமலை, மடத்துக்குளம் பகுதியை பொள்ளாச்சியுடன் சேர்த்து மாவட்டமாக அறிவிக்க வேண்டும்; மக்களின் நீண்ட கால கோரிக்கை குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்,' என இந்திய விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து சங்கத்தின் மாநில தலைவர் 'நீரா' பெரியசாமி, தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனு:
உடுமலையை மையமாக வைத்து புதிதாக மாவட்டம் அல்லது பொள்ளாச்சியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் அமைக்கப்படும் என நீண்ட காலமாக தெரிவிக்கப்பட்டு வருகிறது.
கடந்த ஆட்சிக்காலத்தில், மடத்துக்குளம், உடுமலை, பொள்ளாச்சி, ஆனைமலை, வால்பாறை, கிணத்துக்கடவு உள்ளிட்ட தாலுகாவை உள்ளடக்கி பொள்ளாச்சி மாவட்டம் உருவாக்க கருத்துரு தயாரிக்கப்பட்டு, பணிகள் கிடப்பில் போடப்பட்டது.
இந்த கருத்துருவை பரிசீலிக்காமல், பழநியை தலைமையிடமாக கொண்டு மாவட்டம் உருவாக்கி, உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளை சேர்ப்பதாக தகவல்கள் வெளியாகிறது. இது இப்பகுதி மக்களை அதிருப்திக்குள்ளாகியுள்ளது.
மக்கள் கருத்துக்கு எதிராக மாவட்டம் உருவாக்கப்பட்டால், போராட்டங்கள் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. எனவே, பழைய கருத்துரு அடிப்படையில் பொள்ளாச்சி மாவட்டத்தை உருவாக்க வேண்டும்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.