/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விதி மீறி இயங்கிய சாய ஆலை: மாசுக்கட்டுப்பாடு அதிகாரி ஆய்வு
/
விதி மீறி இயங்கிய சாய ஆலை: மாசுக்கட்டுப்பாடு அதிகாரி ஆய்வு
விதி மீறி இயங்கிய சாய ஆலை: மாசுக்கட்டுப்பாடு அதிகாரி ஆய்வு
விதி மீறி இயங்கிய சாய ஆலை: மாசுக்கட்டுப்பாடு அதிகாரி ஆய்வு
ADDED : மே 10, 2024 12:48 AM
திருப்பூர்;இயக்கத்தை நிறுத்தி பத்து நாட்களாகியும் தகவல் தெரிவிக்காத எஸ்.பெரியபாளையம் பொது சுத்திகரிப்பு மையம் மற்றும் விதிமீறி இயங்கிய சாய ஆலைக்கு மாசுகட்டுப்பாடு வாரியம் நோட்டீஸ் வழங்க உள்ளது.
எஸ்.பெரியபாளையம் பொதுசுத்திகரிப்பு மையம் ஆறு சாய ஆலைகளை உறுப்பினராக கொண்டு, 12 லட்சம் லிட்டர் கொள்ளளவுடன் செயல்படுகிறது. இம்மையத்தில், சுத்திகரிப்பு பணிகள், ஒரு தனியார் நிறுவனத்தால் மேற்கொள்ளப்படுகிறது.
ஆனால், சுத்திகரிப்பு மைய நிர்வாகம், தனியார் நிறுவனத்துக்கு உரிய தொகையை வழங்காமல் நிலுவை வைத்துள்ளது. இதனால், தனியார் நிறுவனம், கடந்த 10 நாளாக சுத்திகரிப்பு பணிகளை நிறுத்தி வைத்துள்ளது.
இது குறித்து, அவ்விவரங்களை மாசுகட்டுப்பாடு வாரியம் மற்றும் சார்ந்துள்ள சாய ஆலைகளும் இயக்கத்தை நிறுத்திவைக்கவேண்டும் என்பது விதிமுறை. ஆனால், அவ்விவரங்களை மாசுகட்டுப்பாடு வாரியத்துக்கு தெரிவிக்கவில்லை.
இச்சூழலில், ஒரு சாய ஆலை மட்டும், சுத்திகரிப்பு மையம் நிறுத்தப்பட்ட நாட்களிலும், முறைகேடாக இயங்கி, துணிக்கு சாயமேற்றியதாக புகார் எழுந்துள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள், வைரலாக பரவி வருவதையடுத்து, மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுக்கு விவரம் தெரியவந்தது.
உதவி சுற்றுச்சூழல் பொறியாளர் மன்னர் திப்புசுல்தான், எஸ்.பெரியபாளையம் சுத்திகரிப்பு மையம் மற்றும் அந்த சுத்தி கரிப்பு மையத்துக்கு உட்பட்ட சாய ஆலைகளில் நேற்று ஆய்வு செய்தார்.
மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'எஸ்.பெரியபாளையம் சுத்திகரிப்பு மையம் இயக்கத்தை நிறுத்தியது குறித்து மாசுகட்டுப்பாடு வாரியத்துக்கு தகவல் தெரிவிக்கவில்லை. ஒரு சாய ஆலை மட்டும் இயங்கியதும், சாயக்கழிவுநீரை வளாகத்திலேயே, கலெக் ஷன் டேங்கில் சேமித்து வைத்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. விதிமீறிய பொதுசுத்திகரிப்பு மையம் மற்றும் சாய ஆலைக்கு நோட்டீஸ் வழங்கப்படும்,' என்றனர்.