ADDED : ஏப் 30, 2024 11:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அனுப்பர்பாளையம்;திருப்பூர், போயம்பாளையம் - குருவாயூரப்பன் நகரில் மகாசக்தி மாரியம்மன் கோவில் உள்ளது.
கோவிலில் சித்திரை மாத பொங்கல் பூச்சாட்டு விழா நடைபெற்று வருகிறது. நேற்று மாலை நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் முளைப்பாலிகை எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு சென்றனர். தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.