நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி; அவிநாசி அடுத்த ராயம்பாளையம், ஸ்ரீ காட்டு மாரியம்மன் கோவிலில் பொங்கல் பூச்சாட்டு விழா துவங்கியது.
நேற்று காப்பு கட்டுதல், கம்பம் நடுதல் ஆகியவை நடந்தது. நாள்தோறும் சிறப்பு அபிஷேக பூஜை நடைபெறுகிறது. நாளை அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக கோவிலுக்கு வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
வரும், 13ம் தேதி அம்மன் அழைத்தல், மாவிளக்கு எடுத்து வருதல், பூவோடு எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் அபிஷேக பூஜைகள், சிறப்பு அலங்காரம் ஆகியன நடைபெறும். கரகம் எடுத்து வருதல், தீபாராதனை ஆகியன நடைபெற உள்ளது. அன்றயை தினம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.