/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொன்னர் - சங்கர் திருக்கல்யாணம்: மக்கள் பங்கேற்பு
/
பொன்னர் - சங்கர் திருக்கல்யாணம்: மக்கள் பங்கேற்பு
ADDED : ஜூன் 06, 2024 11:32 PM

உடுமலை:கொடுங்கியம் கிராமத்தில், பொன்னர்-சங்கர் கிராமிய கதை பாடல் நிகழ்ச்சியில், நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான மக்கள் பங்கேற்றனர்.
உடுமலை அருகே, கொடுங்கியம் கிராமத்தில், கடந்த இரண்டு வாரமாக, பொன்னர்-சங்கர் கிராமிய கதை பாடல் தொடர் நிகழ்ச்சி நடக்கிறது. இதில், செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிேஷகம், குன்னுடையாசாமி தாமரை, அரியநாச்சி பிறப்பு, நன்னீர் ஆண்டு விழா, செல்லாண்டியம்மன் தேரோட்டம், தாமரை தவசு, தாமரை வளைகாப்பு, பொன்னர்-சங்கர் அருக்காணி தங்கம் பிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது.
நேற்று முன்தினம் இரவு பொன்னர்-சங்கர் ஸ்ரீபச்சாயி, ஸ்ரீபவளாயி திருக்கல்யாண வைபவம் நடந்தது. முன்னதாக, உற்சவ மூர்த்திகளுக்கு, அபிேஷக, அலங்கார பூஜைகள் நடந்தது.
தொடர்ந்து, கணபதி பூஜை, சுயம்வரா பார்வதி ேஹாமமும், திருக்கல்யாணமும் நடந்தது. திருக்கல்யாண வைபவத்தை உடுமலை சீதாராமன், சிவா குழுவினர் நடத்தினர். அன்னதானம் வழங்கப்பட்டது. கொடுங்கியம் மற்றும் சுற்றுப்பகுதி கிராமங்களை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர்.