தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம்

மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம்

மக்கள் தொகை தின விழிப்புணர்வு ஊர்வலம்


ADDED : ஜூலை 13, 2024 12:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 13, 2024 12:12 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்;உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், உலக மக்கள் தொகை விழிப்புணர்வு நிகழ்ச்சி, திருப்பூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார்.

மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பேச்சுப்போட்டியில் வெற்றிபெற்ற கல்லுாரி மாணவ, மாணவியர், செவிலியர்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது. அனைவருக்கும் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய மஞ்சப்பை, துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது. உறுதி மொழியேற்கப்பட்டது.

விழிப்புணர்வு வாகன பேரணியை, கலெக்டர் கொடியசைத்து துவக்கிவைத்தார். பழனியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவியர், தாராபுரம் பிஷப் செவிலியர் கல்லுாரி, ரேவதி செவிலியர் கல்லுாரி தாராபுரம் சாரா செவிலியர் கல்லுாரி மாணவியர் 100 பேர், மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது குறித்த விழிப்புணர்வு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.

திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை டீன் முருகேசன், இணை இயக்குனர் (மருத்துவ பணி) ராமசாமி, துணை இயக்குனர்கள் கவுரி, முரளிசங்கர் உள்பட அனைத்து அரசு துறை அதிகாரிகள், அலுவலர்கள், மருத்துவ பணியாளர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us