/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மருத்துவ செலவு தொகை திரும்ப பெற வாய்ப்பு
/
மருத்துவ செலவு தொகை திரும்ப பெற வாய்ப்பு
ADDED : ஆக 03, 2024 06:08 AM
திருப்பூர்: திருப்பூர் கலெக்டர் கிறிஸ்துராஜ் அறிக்கை:திருப்பூர் மாவட்ட அலகில் பணிபுரியும் அரசுப் பணியாளர்கள் மற்றும் அரசுப்பணியில் இருந்து ஓய்வு பெற்ற ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள், 2023, ஜூன், 1ம் தேதி முதல், 2024, மே, 30ம் தேதி வரை, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மருத்துவ செலவினத் தொகையை மீளப்பெறுவதற்கான விண்ணப்பத்துடன் கூடிய மருத்துவ செலவு பட்டியலை சமர்பிக்க வேண்டும்.
அரசுப் பணியாளர்கள், தாங்கள் பணிபுரியும் அலுவலகம் வாயிலாகவும்; ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், தாங்கள் ஓய்வூதியம் பெறும் சம்மந்தப்பட்ட கருவூலம் வாயிலாக, யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் சென்னைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள், வரும், 16ம் தேதிக்குள் சென்று சேர வேண்டும்.