/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தபால் ஸ்டாம்ப் சேகரிப்பு: திருப்பூரிலும் பயிற்சி தேவை
/
தபால் ஸ்டாம்ப் சேகரிப்பு: திருப்பூரிலும் பயிற்சி தேவை
தபால் ஸ்டாம்ப் சேகரிப்பு: திருப்பூரிலும் பயிற்சி தேவை
தபால் ஸ்டாம்ப் சேகரிப்பு: திருப்பூரிலும் பயிற்சி தேவை
ADDED : மே 12, 2024 11:19 PM
உடுமலை;தமிழக தபால் துறையில் செயல்படும் ஸ்டாம்ப் சேகரிப்பு மையம் மூலம் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை படிக்கும் பள்ளி மாணவர்களுக்கு மூன்று கட்டமாக கோடைக்கால பயிற்சி வழங்கப்படுகிறது. மே, 10ல் துவங்கியுள்ள பயிற்சி 25ம் தேதி வரை நடக்கிறது.
பயிற்சியில், தபால் ஸ்டாம்ப் சேகரிப்பு மற்றும் அறிமுகம், தபால் ஸ்டாம்ப் கண்காட்சியில் பங்கேற்க மாணவர் எவ்வாறு தயாராக வேண்டும், கடிதம் எழுதுதல், பிறருடன் தகவல் தொடர்பு திறன், தபால் துறையின் செயல்பாடு குறித்து மாணவர்களுக்கு கற்றுத்தரப்படுகிறது. பயிற்சியில் சேர தபால்துறை மூலமே பதிவு கட்டணமாக, 250 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
பயிற்சியின் முடிவில் சான்றிதழும் வழங்கப்படுகிறது. சென்னையில் உள்ள அண்ணா சாலை தலைமை தபால் அலுவலகத்தில் மட்டும் இப்பயிற்சி வழங்கப்படுகிறது.
பயிற்சியை சென்னையில் மட்டும் நடத்தாமல், அனைத்து மாவட்ட தபால் அலுவலகங்களிலும் நடத்தினால், மாணவருக்கு பயனுள்ளதாக இருக்கும்.