/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
போஸ்டர் விவகாரம்; போலீசில் புகார்
/
போஸ்டர் விவகாரம்; போலீசில் புகார்
ADDED : ஜூலை 24, 2024 11:59 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொங்கலுார், : கண்டியன் கோவிலில், போஸ்டர் ஒட்டப்பட்டது தொடர்பாக, போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
பொங்கலுார் ஒன்றியம், கண்டியன் கோவில் ஊராட்சியில் தலைவர், கவுன்சிலர் ஆகியோர் துாக்கத்தில் இருப்பதாகவும், துாக்கத்திலிருந்து யாரும் எழுப்பி விடாதீர்கள் என்றும் ஊராட்சி முழுவதும் நேற்று முன்தினம் பல இடங்களில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.
இதனை, பொங்கலுார் ஒன்றிய தி.மு.க., இளைஞரணி அமைப்பாளர் ரமேஷ் அவதுாறு பரப்பும் வகையில் ஒட்டியதாக கூறி மற்றொரு கோஷ்டியைச் சேர்ந்த தி.மு.க.,வினர் அவிநாசிபாளையம் போலீசில் புகார் கொடுத்தனர். இது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.