/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விநாயகர் சதுர்த்தி விழாமின் பராமரிப்பு ஒத்திவைப்பு
/
விநாயகர் சதுர்த்தி விழாமின் பராமரிப்பு ஒத்திவைப்பு
விநாயகர் சதுர்த்தி விழாமின் பராமரிப்பு ஒத்திவைப்பு
விநாயகர் சதுர்த்தி விழாமின் பராமரிப்பு ஒத்திவைப்பு
ADDED : செப் 05, 2024 12:43 AM
திருப்பூர் : விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு, மாதாந்திர மின் பராமரிப்பு பணிக்கென, மின்தடை செய்வது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மின்வாரியம் சார்பில், ஒவ்வொரு வாரமும் சனி தோறும், ஒவ்வொரு பகுதிகளில் மின்தடை செய்யப்பட்டு, மின் பராமரிப்புப்பணி மேற்கொள்ளப்படும். அந்த வகையில் வரும், 7ம் தேதி அவிநாசியில் மின் தடை செய்யப்பட வேண்டிய நிலையில், அன்றைய தினம் விநாயகர் சதுர்த்தி என்பதால், மாதாந்திர மின் பராமரிப்புபணிக்கான மின் தடை செய்யப்பட மாட்டாது என, மின்வாரியம் தெரிவித்துள்ளது. 7ம் தேதி துவங்கி, 10ம் தேதி வரை விநாயகர் விசர்ஜன ஊர்வலம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதால், மின்தடை ஏற்படாத வகையில் மாதாந்திர பராமரிப்புப்பணியை ஒத்தி வைத்து, மின்வாரியம் அறிவித்துள்ளது. மாவட்டம் முழுக்கவே இத்தகைய ஏற்பாடுகளை மின்வாரியம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.