/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புலிகள் கணக்கெடுப்பு பணி ஒத்திவைப்பு
/
புலிகள் கணக்கெடுப்பு பணி ஒத்திவைப்பு
ADDED : மே 30, 2024 11:52 PM
உடுமலை;ஆனைமலை புலிகள் காப்பக பகுதிகளில், கோடை கால வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தேசிய புலிகள் கணக்கெடுப்பின், ஒரு பகுதியாக தேசிய புலிகள் பாதுகாப்பு அமைப்பு வழிகாட்டுதலின் அடிப்படையில், கோடைகால புலிகள் மற்றும் இதர மாமிச உண்ணிகள், மிகப்பெரிய தாவர உண்ணிகள் கணக்கெடுப்பு பணி, ஆனைமலை புலிகள் காப்பகத்தில் இன்று துவங்கி, ஜூன் 5 வரை நடத்த திட்டமிடப்பட்டது.
இதற்காக, நேற்று முன்தினம், ஆனைமலை புலிகள் காப்பகம், திருப்பூர் வனக்கோட்டத்தில், கணக்கெடுப்பு பணியில் ஈடுபட உள்ள வன அலுவலர்கள் மற்றும் தன்னார்வர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு, உபகரணங்களும் வழங்கப்பட்டன.
வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், 'கோடை கால புலிகள் கணக்கெடுப்பு பணி நிர்வாக காரணங்களினால், கோவை, திருப்பூர் வனக்கோட்டங்களில் உயர் அதிகாரிகள் உத்தரவு அடிப்படையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மீண்டும் கணக்கெடுக்கும் பணி விரைவில் துவங்கும்,' என்றனர்.