/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்வது அரசு பள்ளிகளுக்கு சவால்
/
பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்வது அரசு பள்ளிகளுக்கு சவால்
பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்வது அரசு பள்ளிகளுக்கு சவால்
பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்வது அரசு பள்ளிகளுக்கு சவால்
ADDED : மே 16, 2024 11:23 PM
உடுமலை:பிளஸ் 1 தேர்ச்சி சதவீத குறைவால், புதிய கல்வியாண்டின் பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார் செய்வது அரசு பள்ளிகளுக்கு சவாலாக உள்ளது.
தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வும், மார்ச், ஏப்ரல் மாதங்களில் பிளஸ் 1, பத்தாம் வகுப்பு தேர்வுகளும் நடந்தன. இதில், கடந்த 6ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகளும், 10ம் தேதி பத்தாம் வகுப்புக்கும், கடந்த 14ம் தேதி பிளஸ் 1 தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டன.
உடுமலை கோட்டத்தில் கடந்தாண்டிலும் நடப்பாண்டிலும் நுாறு சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிகளின் எண்ணிக்கை ஒரே மாதிரியாக உள்ளது. ஆனால் பள்ளிகள் வேறுபட்டுள்ளது.
அதேபோல், மற்ற பள்ளிகளின் தேர்ச்சி சதவீதத்திலும் அதிகமான முன்னேற்றம் இல்லை. இதனால் பிளஸ் 1 சேர்க்கை துவங்கியும் மாணவர்களுக்கு பள்ளிகளை தேர்ந்தெடுப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இறுதியாக பிளஸ் 1 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. அதில் அரசு பள்ளிகளில் ஒன்று மட்டுமே நுாறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளது. மற்ற பள்ளிகளின் தேர்ச்சியும் குறைவாக உள்ளது.
இதனால் புதிய கல்வியாண்டில், பிளஸ் 2 பொதுத்தேர்வை நினைத்து பள்ளி நிர்வாகத்தினர் இப்போதே அதிருப்தியில் உள்ளனர்.
பிளஸ் 1 தேர்வுக்கு வராமல் இருப்பவர்கள், தேர்ச்சி பெறாதவர்களின் மீது கல்வியாண்டு முழுவதும் சிறப்பு கவனம் செலுத்துவதற்கு பள்ளி நிர்வாகத்தினர் திட்டமிடுகின்றனர்.இதற்கான ஆயத்த பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
அரசுப்பள்ளி ஆசிரியர்கள் கூறியதாவது:
பள்ளிகளில் கற்றலில் பின்தங்கிய மாணவர்களின் மீது, சிறப்பு கவனம் செலுத்தப்படும். இதற்கு பெற்றோர் தரப்பிலும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.
வளர் இளம் பருவத்தினர் பல்வேறு சிந்தனைகளால் கற்றலில் கவனம் இல்லாமல் தேர்வில் தோல்வியடைகின்றனர். நடப்பாண்டில் பிளஸ் 1 தேர்ச்சி சதவீதம் குறைவாக இருப்பதால், அவர்களை பிளஸ் 2 தேர்வு சிறப்பாக எழுத வைப்பது ஆசிரியர்களுக்கு சவாலான ஒன்றாக உள்ளது.
இவ்வாறு, தெரிவித்தனர்.

