/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'பிரஸ்' ஸ்டிக்கர் வாகனங்கள் போலீசார் அதிரடி ஆய்வு
/
'பிரஸ்' ஸ்டிக்கர் வாகனங்கள் போலீசார் அதிரடி ஆய்வு
ADDED : ஆக 30, 2024 10:50 PM
திருப்பூர்:திருப்பூர் பகுதியில் சமீபமாக சில குற்றச் சம்பவங்களில் வெளிவராத மற்றும் பிரபலமில்லாத பத்திரிகைகளின் பெயரில் நிருபர் என அடையாள அட்டை வைத்திருந்த சில நபர்கள் பிடிபட்டனர். இதனால், மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி இது குறித்து உரிய கண்காணிப்பு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
நேற்று நகரின் பிரதான ரோடுகளில் போக்குவரத்து போலீசார் வாகன சோதனை நடத்தினர். இதில், பிரஸ் ஸ்டிக்கர் உடன் வந்த சில பைக்குகளை போலீசார் நிறுத்தி, அடையாள அட்டை உள்ளிட்ட ஆவணங்களை ஆய்வு செய்தனர்.இதில் சில நபர்கள், எந்த ஊடகத்திலும் பணியாற்றாமல் வெறுமென பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிய வாகனங்களை பயன்படுத்தியது தெரிந்தது. வாகனத்தில் வந்த நபர்களை கொண்டே போலீசார் அந்த ஸ்டிக்கர்களை கிழித்து அகற்றுமாறு அறிவுறுத்தினர். மேலும், இதுபோல் இனிமேல் பிரஸ் ஸ்டிக்கர் பயன்படுத்தக் கூடாது என்று எச்சரித்தனர்.