/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூசாரியை மாற்ற வேண்டும்: மனு அளித்த பக்தர்கள்
/
பூசாரியை மாற்ற வேண்டும்: மனு அளித்த பக்தர்கள்
ADDED : ஏப் 23, 2024 11:32 PM
திருப்பூர் : பணம் பறிக்கும் நோக்குடன் செயல்படும் பூசாரியை மாற்ற வேண்டுமென, பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர்.
இது குறித்து, வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் செயல் அலுவலர் அலுவலகத்தில், ராமாச்சியம்பாளையம் பக்தர்கள் கொடுத்த மனு:
ராமாச்சியம்பாளையம் மாகாளியம்மன் கோவில் பூசாரி மனோகர், பூஜை நேரத்தில் வெளியே அமர்ந்து 'மொபைல் போன்' பார்த்துக்கொண்டிருக்கிறார். மடப்பள்ளியில் அமுது தயாரிக்காமல், சிற்றுண்டி தயாரித்து சாப்பிடுகின்றனர். வசதியானவர்களுக்கு மட்டும், வழிபாட்டில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது.
அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் என்பதால் யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்கிறார். பக்தர்களிடம் பணம் பறிக்கும் நோக்கத்துடன் செயல்படுகிறார். அர்ப்பணிப்பு உணர்வுடன் பூஜை செய்யும் நபரை பூசாரியாக நியமிக்க வேண்டும்.
இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.

