ADDED : ஜூன் 24, 2024 02:18 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்;மாவட்ட அளவிலான, வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார்.
மத்திய, மாநில அரசு திட்டங்களில் நடந்து வரும் திட்ட பணிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்து, துறைவாரியாக ஆலோசிக்கப்பட்டது. மக்களின் அடிப்படை வசதிகளுக்கு முன்னுரிமை அளித்து பணிகளை செய்ய வேண்டும். அரசு திட்டம், தகுதியான பயனாளிகளுக்கு சரியாக சென்றடைய வேண்டும்.
அனைத்து அரசுத்துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றி, மக்கள் பணிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டுமென, அறிவுறுத்தப்பட்டது.
