/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பரிசுக்கோப்பை பொதுத்தேர்வில் சாதனை
/
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பரிசுக்கோப்பை பொதுத்தேர்வில் சாதனை
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பரிசுக்கோப்பை பொதுத்தேர்வில் சாதனை
மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு பரிசுக்கோப்பை பொதுத்தேர்வில் சாதனை
ADDED : மே 31, 2024 01:23 AM

திருப்பூர்;பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் சாதித்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்குப் பாராட்டு விழா நடந்தது.
திருப்பூர் மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், துணை எழுத்தர் இன்றி தேர்வு எழுதி சாதித்த மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான பாராட்டு விழா, கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உள்ளடக்கிய கல்வி பிரிவு சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா தலைமை வகித்தார்.
துணை எழுத்தர் இன்றி, சுயமாக பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி, 80 சதவீதத்துக்கு மேல் மதிப்பெண் பெற்ற 8 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்; ஒரு பிளஸ் 1 மாணவர்; 14 பிளஸ் 2 மாணவர் என, 23 மாணவ, மாணவியருக்கு பரிசுக்கோப்பை, புத்தகம் மற்றும் ஆயிரம் ரூபாய் ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
ஒருங்கிணைந்த பள்ளி கல்வி உதவி திட்ட அலுவலர் அண்ணாதுரை, ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரி உள்பட கல்வித்துறை அதிகாரிகள், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் மற்றும் பெற்றோர் பங்கேற்றனர்.