/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறுமைய விளையாட்டு வென்றவர்களுக்கு பரிசு
/
குறுமைய விளையாட்டு வென்றவர்களுக்கு பரிசு
ADDED : செப் 04, 2024 02:23 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி;அவிநாசி குறுமைய விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிக்கப்பட்டது.
பழங்கரை ஊராட்சி, பச்சாம்பாளையத்தில் எஸ்.கே.எல்., பப்ளிக் பள்ளியில், அவிநாசி குறுமைய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. அதில், வெற்றி பெற்றவர்களுக்கான பரிசளிப்பு விழா நேற்று நடைபெற்றது.
பள்ளியின் முதல்வர் மீனாட்சி வரவேற்புரை வழங்கினார். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பள்ளியின் நிர்வாக இயக்குனர் கோவிந்தசாமி, பள்ளியின் தாளாளர் ராதாமணி ஆகியோர் பரிசுகளை வழங்கினர். விழாவில், பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்கள், விளையாட்டு வீரர், வீராங்கனையர் பங்கேற்றனர்.