/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேஷன் கடைக்குப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்
/
ரேஷன் கடைக்குப் பொருட்கள் கிடைப்பதில் சிக்கல்
ADDED : ஆக 06, 2024 06:38 AM

கால்வாய் அடைப்பு
திருப்பூர், எஸ்.வி., காலனி கிழக்கு, நான்காவது வீதியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் உள்ளது. சுத்தம் செய்ய வேண்டும்.
- முத்துவேல், எஸ்.வி., காலனி. (படம் உண்டு)
திருப்பூர், 33வது வார்டு, பாரப்பாளையம், அம்மன் கோவில் தோட்டம் பகுதியில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. சுத்தம் செய்ய வேண்டும்.
- இனியா, பாரப்பாளையம். (படம் உண்டு)
லாரி வர இயலாது
திருப்பூர், 24வது வார்டு, ரஜினிகாந்த் திருமண மண்டபம் கிழக்கு வீதி, ரேஷன் கடை அருகே, பைப் பதிக்க குழி தோண்டி, 15 நாட்களாக அப்படியே விடப்பட்டுள்ளது. இதனால், ரேஷன் கடைக்கு பொருட்களுடன் லாரி வர வழியில்லை.
- ரவிக்குமார், சாமுண்டிபுரம். (படம் உண்டு)
குப்பைத்தொட்டி இடையூறு
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, கே.எஸ்., தியேட்டர், ஐஸ்வர்யா காலனியில் ஒருபுறம் மின்கம்பம், மறுபுறம் குப்பை தொட்டி இடையூறாக உள்ளது.
- சந்திரன், ஐஸ்வர்யா காலனி. (படம் உண்டு)
வீணாகும் தண்ணீர்
திருப்பூர், கருவம்பாளையம், நாதன் மில் ஸ்டாப் அருகே குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது. குழாய் உடைப்பை சரிசெய்ய வேண்டும்.
- ஆனந்தராஜ், கருவம்பாளையம். (படம் உண்டு)
திருப்பூர், கணியாம்பூண்டி - ராக்கியபாளையம் ரோட்டில் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகிறது.
- குமார், கணியாம்பூண்டி. (படம் உண்டு)
திருப்பூர், 32வது வார்டு, சூர்யா காலனி, விநாயகர் கோவில் அருகே குழாய் உடைந்து சாலையில் தண்ணீர் வீணாகிறது.
- சங்கரராமன், சூர்யா காலனி. (படம் உண்டு)
எரியாத விளக்கு
திருப்பூர், ஊத்துக்குளி ரோடு, பாளையக்காடு - பண்டிட் நகர் பள்ளி செல்லும் வழியில் மின்விளக்குகள் சரிவர எரிவதில்லை. இருள்சூழ்ந்து காணப்படுகிறது.
- ஜெயந்தி, பண்டிட் நகர். (படம் உண்டு)
அரைகுறை பணி
திருப்பூர், ஆறாவது வார்டு, நல்லாத்துப்பாளையத்தில் கான்கிரீட் ரோடு போட்டுள்ளனர். பாதாள சாக்கடை மூடி மேலே இல்லை; குழியாக உள்ளது. முழுமையாக பணி முடிக்காமல், அரைகுறையாக விட்டுச் சென்றுள்ளனர்.
- உதயகுமார், நல்லாத்துப்பாளையம். (படம் உண்டு)
ரியாக் ஷன்
கால்வாய் சுத்தமானது
திருப்பூர், தாராபுரம் ரோடு, உஷா தியேட்டர் ஸ்டாப், பி.கே.ஆர்., காலனியில் கால்வாய் அடைப்பு ஏற்பட்டு, கழிவுநீர் வெளியேறியது. 'தினமலர்' நாளிதழ் செய்தியால், கால்வாய் சுத்தம் செய்யப்பட்டது.
- சம்பத், பி.கே.ஆர்., காலனி. (படம் உண்டு)
விளக்கு எரிகிறது
திருப்பூர், காங்கயம் ரோடு, சி.டி.சி., டிப்போ ரவுண்டானாவில் உயர்கோபுர மின்விளக்கு எரியாமல் இருப்பது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. தெருவிளக்கு சரிசெய்யப்பட்டு விட்டது.
- ஆனந்தராஜா, காங்கயம் ரோடு. (படம் உண்டு)
சாலை சீரமைப்பு
திருப்பூர், சந்திராபுரம், ராஜிவ் காந்தி நகரில் சாலை குழியாக இருப்பதாக, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. 'பேட்ஜ்ஒர்க்' செய்து, சாலையை சீரமைத்துள்ளனர்.
- ராமராஜ், சந்திராபுரம். (படம் உண்டு)