/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பஸ்கள் இல்லாமல் சிக்கல்; பயணியர் திண்டாட்டம்
/
பஸ்கள் இல்லாமல் சிக்கல்; பயணியர் திண்டாட்டம்
ADDED : செப் 17, 2024 10:13 PM
உடுமலை : பெதப்பம்பட்டி வழித்தடத்தில் இரவு நேரத்தில், போதிய பஸ்கள் இல்லாததால், பயணியர் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர்.
உடுமலையில் இருந்து பெதப்பம்பட்டி வழியாக அரசூர், வீதம்பட்டி, அடிவள்ளி, அம்மாபட்டி, நெகமம் உள்ளிட்ட பகுதிகளுக்கு டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. கொரோனா பெருந்தொற்றுக்குப்பிறகு, பெரும்பாலான பஸ்கள் கிராமத்துக்கு இயக்கப்படவில்லை.
தற்போது, இரவு, 8:00 மணிக்கு மேல் ஒரு மணி நேரத்துக்கும் அதிகமாக பஸ்சுக்காக பயணியர் காத்திருக்க வேண்டியுள்ளது. பெதப்பம்பட்டி சென்று, அங்கிருந்து பஸ் மாறி கிராமங்களுக்கு செல்லும் பயணியர் அதிகளவு பாதிக்கப்படுகின்றனர். சில நேரங்களில், பஸ் இல்லாமல் கிராமங்களுக்கு நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
எனவே, வழித்தடத்தில், ஏற்கனவே இயக்கிய அனைத்து டவுன் பஸ்களையும் இயக்க, கிளை போக்குவரத்து கழகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

