/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விசர்ஜன ஊர்வலம்; ஆயிரத்து 500 போலீசார் பணியில்
/
விசர்ஜன ஊர்வலம்; ஆயிரத்து 500 போலீசார் பணியில்
ADDED : செப் 08, 2024 11:20 PM
திருப்பூர்:திருப்பூர் மாநகரில் நடக்கும் விசர்ஜன ஊர்வலத்தில், ஆயிரத்து, 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. ஹிந்து முன்னணி உள்ளிட்ட ஹிந்து அமைப்பு, பொதுமக்கள் சார்பில், மாநகரில், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலைகள் உட்பட மாவட்டம், முழுவதும், 5 ஆயிரம் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்தனர்.
நேற்று முதல் வரும், 11 ம் தேதி வரை, பிரதிஷ்டை செய்த சிலைகளை விசர்ஜனம் ஊர்வலமாக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைக்க துவங்கியுள்ளனர்.
இச்சூழலில், விநாயகர் சதுர்த்தியையொட்டி மாநகரம் போலீசார், பிற மாவவட்ட போலீசார், பட்டாலியன் போலீசார், ஊர்க்காவல் படையினர் என, ஆயிரத்து, 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த தயார் நிலையில் உள்ளனர்.
மேலும், கூடுதலாக தமிழக கமாண்டோ படையினர் மற்றும் தமிழக சிறப்பு போலீஸ் படையினர் பணியில் ஈடுபட உள்ளனர். முக்கிய இடங்களில் 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.