/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மின் பொருட்கள் விற்றால் லாபம்'; பெண்ணிடம் ரூ.22 லட்சம் மோசடி
/
'மின் பொருட்கள் விற்றால் லாபம்'; பெண்ணிடம் ரூ.22 லட்சம் மோசடி
'மின் பொருட்கள் விற்றால் லாபம்'; பெண்ணிடம் ரூ.22 லட்சம் மோசடி
'மின் பொருட்கள் விற்றால் லாபம்'; பெண்ணிடம் ரூ.22 லட்சம் மோசடி
ADDED : பிப் 24, 2025 01:11 AM
திருப்பூர்; திருப்பூரில் எலக்ட்ரிக்கல் பொருட்களை வாங்கி விற்றால் கூடுதல் லாபம் கிடைக்கும் என கூறி, பெண்ணிடம், 22 லட்சம் ரூபாயை மோசடி செய்தது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர்.
திருப்பூரை சேர்ந்த, 27 வயது இளம்பெண் ஒருவருக்கு சமீபத்தில் 'வாட்ஸ் அப்' அழைப்பு வந்தது. அதில், பேசிய நபர் 'எலக்ட்ரிக்கல் பொருட்களை வாங்கி விற்பனை செய்தால், அதிகப்படியான லாபம் பெறலாம்' என கூறினார். இதை நம்பிய இளம்பெண், இதை விற்பனை செய்ய ஒப்பு கொண்டார்.
அந்த நபர் கொடுத்த 'லிங்க்' மூலம், டெலிகிராம் கணக்கிற்குள் நுழைந்தார். தொடர்ந்து, விற்பனை தொடர்பாக வர்த்தக கணக்கை துவங்கினார். முதல் கட்டமாக, ஆயிரம் ரூபாய் லாபம் கிடைத்தது. தொடர்ந்து பல கட்டங்களாக பார்க்கும் போது, ஒரு லட்சம் ரூபாய் இருந்தது.
தொடர்ந்து பணத்தை எடுக்க முயன்ற போது, 'கிரெடிட்' மதிப்பெண் குறைவாக உள்ளதால், பணத்தை முதலீடு செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். இதை நம்பிய அப்பெண், பல்வேறு தவணையாக, 22 லட்சம் ரூபாய் முதலீடு செய்தார். ஆனால், பணத்தை எடுக்க முடியவில்லை. ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர் திருப்பூர் மாநகர சைபர் கிரைம்போலீசில் புகார் அளித்தார்.

