/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிடப்பில் திட்ட சாலை பணி ;ஆய்வு நடத்த எதிர்பார்ப்பு
/
கிடப்பில் திட்ட சாலை பணி ;ஆய்வு நடத்த எதிர்பார்ப்பு
கிடப்பில் திட்ட சாலை பணி ;ஆய்வு நடத்த எதிர்பார்ப்பு
கிடப்பில் திட்ட சாலை பணி ;ஆய்வு நடத்த எதிர்பார்ப்பு
ADDED : மார் 04, 2025 06:14 AM
உடுமலை; உடுமலை நகரம், கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. நகருக்குள் போக்குவரத்து நெரிசல் நிரந்தரமாக உள்ளது.
இதை தவிர்க்க, திட்ட சாலை அமைப்பதற்கான கருத்துரு, சில ஆண்டுகளுக்கு முன், நகராட்சி நிர்வாகம் சார்பில் தயாரிக்கப்பட்டது.
அதன்படி, தேசிய நெடுஞ்சாலையில், மின்மயானம் அருகே பிரிந்து, செஞ்சேரிமலை ரோடு, பல்லடம், தாராபுரம் மாநில நெடுஞ்சாலையை தொட்டு, எஸ்.வி., மில் அருகே, மீண்டும் தேசிய நெடுஞ்சாலையில் இணையும் வகையில் திட்ட சாலை அமைக்க திட்டமிடப்பட்டது.
இதற்காக அளவீட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு, ஏற்கனவே ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலங்களுடன், சில இடங்களில் தானம் பெற்றும், அரசு நிலத்தை கையகப்படுத்தியும், 60 அடி திட்ட சாலை அமையும் என தெரிவிக்கப்பட்டது.
முதற்கட்டமாக, நகராட்சி சார்பில், மின்மயானம் அருகே, ராஜவாய்க்கால் பள்ளத்திலிருந்து துவங்கி, வேளாண்துறை அலுவலக சுற்றுச்சுவர் வரை, ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.
இந்த திட்டசாலை அமைந்தால், நகரில் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், திட்டம், பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது.
இத்திட்டம் குறித்து மீண்டும் ஆய்வு செய்து, திட்ட சாலை அமைக்க வேண்டும் என நகராட்சி நிர்வாகத்தை மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.