/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்பட திட்டம்! பா.ஜ., வேட்பாளர் வசந்தராஜன் உறுதி
/
விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்பட திட்டம்! பா.ஜ., வேட்பாளர் வசந்தராஜன் உறுதி
விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்பட திட்டம்! பா.ஜ., வேட்பாளர் வசந்தராஜன் உறுதி
விவசாயிகள் வாழ்வாதாரம் மேம்பட திட்டம்! பா.ஜ., வேட்பாளர் வசந்தராஜன் உறுதி
ADDED : ஏப் 14, 2024 11:24 PM

உடுமலை;'காய்கறி சாகுபடியாளர்களின் வாழ்வாதாரம் மேம்பட, சிறப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படும்,' என பா.ஜ., வேட்பாளர் வசந்தராஜன் பேசினார்.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் வசந்தராஜன் நேற்று, உடுமலை ஒன்றிய கிராமங்களில், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
உரல்பட்டி கிராமத்தில் அவர் பேசியதாவது: தென்னை விவசாயிகளின் பிரச்னையை தி.மு.க., அரசு கண்டுகொள்ளவே இல்லை. அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை, உற்பத்தியின்றி முடங்கியுள்ளதால், கரும்பு விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
உடுமலை வட்டாரத்தில், காய்கறி சாகுபடி பரப்பு அதிகம் உள்ளது. காய்கறிக்கு விலை கிடைக்காத போது, விவசாயிகள் நஷ்டமடைகின்றனர். இப்பிரச்னைக்கு தீர்வாக, வட்டாரவாரியாக உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் துவக்கப்படும்.
அதில், சாகுபடிக்கு ஏற்ப விவசாயிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, மதிப்பு கூட்டு பொருட்கள் தயாரிக்க பயிற்சியளிக்கப்படும். மேலும், இத்தகைய உழவர் நிறுவனங்களுக்கு எளிதாக வங்கிக்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இதனால், விவசாயிகள் தொழில் முனைவோராக மாறி, அவர்களது வாழ்வாதாரம் மேம்படும். இவ்வாறு, கிராமப்புற மக்கள், விவசாயிகள், நெசவாளர்கள் என அனைத்து தரப்பினருக்கும் பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி செயல்படுத்தியுள்ளார்.
இவ்வாறு, அவர் பேசினார்.
முன்னதாக பிரதமர் மோடி வெளியிட்ட தமிழ் புத்தாண்டு வாழ்த்து அட்டையை கிராம மக்களுக்கு வினியோகித்து, வாழ்த்து தெரிவித்தார். பிரசாரத்தில் அ.ம.மு.க., ஒன்றிய செயலாளர் ராஜ்குமார் மற்றும் கூட்டணி கட்சியினர் உடனிருந்தனர்.
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்று வட்டார ஊராட்சிகளில் பொள்ளாச்சி லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் வசந்தராஜன் பேசியதாவது:
கொரோனா காலகட்டத்தில் தடுப்பூசி வழங்கி ஏராளமானோர் உயிரை காப்பாற்றியது பா.ஜ., அரசு. நிலவின் தென் துருவத்தில் முதன் முதலில் ராக்கெட் அனுப்பப்பட்டது. சூரியனுக்கு முதலில் இந்தியா தான் விண்கலம் அனுப்பியது.
இந்தியாவில் டிஜிட்டல் கணக்குகள் சாத்தியம் ஆக்கப்பட்டது. வீடு இல்லாத ஏழை மக்கள், புதிதாக வீடு கட்ட, 2.60 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது வாரிசு அரசியல் நடக்கிறது. இதை வளர்ச்சி அரசியலாக மாற்ற வேண்டும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் தி.மு.க., எம்.பி., கள் தமிழகத்தில் நல்ல திட்டங்கள் எதாவது கொடுத்துள்ளார்களா என்பது பற்றி மக்கள் சிந்திக்க வேண்டும். இம்முறை திராவிட கட்சிகளை தவிர்த்து, பா.ஜ., வுக்கு வாக்களியுங்கள்.
இவ்வாறு, அவர் பேசினார்.

