தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/ ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல். திட்டம் டிச. 31 வரை நீட்டிப்பு

 ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல். திட்டம் டிச. 31 வரை நீட்டிப்பு

 ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல். திட்டம் டிச. 31 வரை நீட்டிப்பு


ADDED : அக் 01, 2026 08:07 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2026 08:07 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருப்பூர்: கூடுதலாக செலுத்திய மத்திய, மாநில வரிகள் மற்றும் தீர்வுகளைத் திரும்ப வழங்கும் ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல். திட்டம், டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஜவுளி ஏற்றுமதியாளர்கள் சந்திக்கும் நிதிச்சுமையை குறைக்கும் வகையில், கூடுதலாக செலுத்திய வரிகளைத் திரும்ப வழங்கும் திட்டத்தை (ஆர்.ஓ.எஸ்.சி.டி.எல்.) மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

ஏற்றுமதியாளர்கள் ஆடை உற்பத்திக்காக பல்வேறு நிலையில் பொருட்களை வாங்கும்போது, மத்திய, மாநில அரசுகளுக்கான வரிகள் மற்றும் தீர்வுகளை செலுத்துகின்றனர். இந்த செலவினங்களை ஏற்றுமதி செய்ய முடியாத நிலையில், கூடுதலாக செலுத்திய வரி மற்றும் தீர்வு இனங்கள் இத்திட்டத்தின் கீழ் திரும்ப வழங்கப்படுகின்றன.

இத்திட்டம் செப்டம்பர் 30-ம் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில், தற்போது டிசம்பர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் (ஏ.இ.பி.சி.) தலைவர் சக்திவேல் கூறியதாவது:

வரிகள் மற்றும் கட்டணங்களின் தொடர் தாக்கத்தை சமாளிக்கவும், சர்வதேச சந்தையில் போட்டியை எதிர்கொள்ளவும் இந்தத் திட்டம் உதவும். உலகளாவிய சந்தைகளில் இந்திய ஆடைத் துறையின் போட்டித்திறனை தொடர்ந்து நிலைநிறுத்துவதற்கு இது உதவியாக இருக்கும்.

தற்போது ஏற்றுமதியாளர்கள் அதிகரித்து வரும் உற்பத்தி மற்றும் செயல்பாட்டு செலவுகளை எதிர்கொண்டு வரும் நிலையில், இத்திட்டத்தின் நீட்டிப்பு உதவியாக இருக்கும். இதன் மூலம் சர்வதேச சந்தைகளில் இந்திய ஆடைத் துறை தொடர்ந்து வலுவாக செயல்பட முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us