/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சொத்து வரியை குறைக்க வேண்டும்; மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றம்!
/
சொத்து வரியை குறைக்க வேண்டும்; மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றம்!
சொத்து வரியை குறைக்க வேண்டும்; மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றம்!
சொத்து வரியை குறைக்க வேண்டும்; மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றம்!
ADDED : மார் 04, 2025 06:41 AM
திருப்பூர்; தமிழகத்தில், குடியிருப்பு, தொழிற்சாலை மற்றும் வணிக கட்டடங்கள் உள்ளிட்டவற்றுக்கு 25 முதல் 150 சதவீதம் வரை உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் முடிவின்படி இதை உயர்த்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. அவ்வகையில், திருப்பூர் மாநகராட்சியிலும் இந்த சொத்து வரி உயர்வு உள்ளிட்டவை செயல்பாட்டுக்கு வந்தது. வரி உயர்வை ரத்து செய்யக் கோரி மன்ற கூட்டத்தில் அ.தி.மு.க., கவுன்சிலர்கள் பிரச்னையைக் கிளப்பினர். அடுத்து, கம்யூ., காங்., பா.ஜ., வினரும் இப்பிரச்னையைக் கையில் எடுத்தனர்.
அதன் தொடர்ச்சியாக அரசியல் கட்சியினர், தொழில் மற்றும் வர்த்தக அமைப்புகள் ஆகியன களம் இறங்கின. மறியல், ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், கடையடைப்பு, கருப்பு கொடி கட்டுதல் என பல விதமான போராட்டங்கள் நடந்தது.
இந்நிலையில், நேற்று மாநகராட்சி மன்ற அவசர கூட்டம் நடந்தது. மேயர் தினேஷ்குமார், திருப்பூரிலுள்ள பல்வேறு அமைப்புகள், பொதுமக்கள், கவுன்சிலர்கள் கோரிக்கையை ஏற்று, 2022 -23ம் நிதியாண்டு முதல் கொண்டு வரப்பட்ட சொத்து வரி உயர்வை குறைக்க அரசு அனுமதிக்க வேண்டும் என்று தீர்மானம் கொண்டு வந்தார். இதனை அனைத்து கட்சி கவுன்சிலர்களும் ஏற்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தீர்மானம் குறித்து மேயர் பேசியதாவது:
பல்வேறு தரப்பினர் கோரிக்கை குறித்து அரசின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அதனடிப்படையில் இந்த தீர்மானம் கொண்டு வரப்படுகிறது. இது அரசுக்கு அனுப்பி வைத்து உரிய அனுமதி பெற்று வரியினங்கள் குறைக்கப்படும். 2008ம் ஆண்டில், கோவை மாநகராட்சியை விட இங்கு வரி அதிகம் நிர்ணயிக்கப்பட்டது. அதனடிப்படையில் இந்த வரி உயர்வு பின்னர், மண்டலம் பிரித்து நிர்ணயிக்கப்பட்டது. 2022-23 ம் நிதியாண்டில் வீடுகளுக்கு 25 சதவீதம், தொழிற்சாலைகளுக்கு, 50 சதவீதம் மற்றும் வணிகப் பயன்பாட்டுக்கு 75 சதவீதம் என்று உயர்ந்தது. தற்போது மண்டல பிரிவு வாரியாக உள்ள வரியினங்கள் பகுதி அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். குப்பை வரி பின் தேதியிட்டு நிர்ணயிக்கப்பட்டது குறித்தும், தாமதத்துக்கான ஒரு சதவீத அபராதம் ஆகியன குறித்தும் துறை அமைச்சர் உறுதி அளித்துள்ளார். அவை குறித்தும் உரிய தீர்வு ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.