/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நபிகள் புகழ்பாடும் மீலாது நபி ஊர்வலம்
/
நபிகள் புகழ்பாடும் மீலாது நபி ஊர்வலம்
ADDED : செப் 17, 2024 11:48 PM

திருப்பூர்: திருப்பூரில் மீலாது நபி முன்னிட்டு, மீலாது கமிட்டி சார்பில் ஊர்வலம் நடைபெற்றது.
இறைத்துாதரர் நபிகள் நாயகத்தின் பிறந்த நாள் மீலாது நபி விழாவாக நேற்று அனைத்து பகுதிகளிலும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திருப்பூர் மாவட்ட மீலாது கமிட்டி சார்பில் நேற்று திருப்பூரில் நபிகள் புகழ் பாடும் பேரணி நடைபெற்றது. திருப்பூர் மாவட்ட கமிட்டி தலைவர் சையது மன்சூர் உசேன் தலைமை வகித்தார்.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் சையது முஸ்தபா, மீலாது கமிட்டி துணை தலைவர் சபீர் உசேன் உள்ளிட்ட நிர்வாகி கள் முன்னிலை வகித்தனர். பெரிய தோட்டம் பள்ளி வாசல் இமாம் உமர் பாரூக், ஈசா கார்மெண்ட்ஸ் சாதிக் அலி ஆகியோர் பேரணியைத் துவக்கி வைத்தனர். பள்ளி வாசல் தலைவர் சிராஜ்தீன் அமைதிப் புறாக்களைப் பறக்க விட்டார்.
ஏராளமான சிறுவர்கள், பெண்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்ட நபிகள் புகழ் பாடும் ஊர்வலம் பெரிய பள்ளி வாசலில் துவங்கியது. பல்வேறு முக்கிய வீதிகள் வழியாகச் சென்றுசி.டி.சி., கார்னர் பகுதியில் நிறைவடைந்தது.