/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஓய்வு பெற்ற பள்ளி - கல்லுாரி ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
ஓய்வு பெற்ற பள்ளி - கல்லுாரி ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஓய்வு பெற்ற பள்ளி - கல்லுாரி ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஓய்வு பெற்ற பள்ளி - கல்லுாரி ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : செப் 03, 2024 11:56 PM

திருப்பூர்:தமிழ்நாடு ஓய்வுபெற்ற பள்ளி, கல்லுாரி ஆசிரியர் நலச்சங்கம் சார்பில், கோரிக்கையை வலியுறுத்தி, தர்ணா போராட்டம் நேற்று நடந்தது.
திருப்பூர் கலெக்டர் அலுவலகம் முன் நடந்த போராட்டத்துக்கு, வட்ட கிளை நிர்வாகி லீலா கிருஷ்ணன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்ட நிர்வாகிகள், போராட்டத்தை விளக்கி பேசினர்.
ஓய்வூதியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுப்படுத்த வேண்டும். மருத்துவ காப்பீடு திட்டத்தை சீரமைக்க வேண்டும். மருத்துவ சிகிச்சைகளுக்கான செலவுகளை குறைத்து வழங்கும் காப்பீடு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காப்பீடு திட்டத்தில், செலவிட்ட மருத்துவ செலவை மீளக்கேட்டு, அனுப்பிய விண்ணப்பங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மத்திய அரசு, காப்பீடு திட்ட சந்தாவுக்கான ஜி.எஸ்.டி., வரியை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். காப்பீடு திட்டத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.