/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தடையை மீறி ஆர்ப்பாட்டம் ;பா.ஜ., தொண்டர்கள் கைது
/
தடையை மீறி ஆர்ப்பாட்டம் ;பா.ஜ., தொண்டர்கள் கைது
ADDED : மே 10, 2024 11:58 PM

திருப்பூர்;திருப்பூரில் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்திய பா.ஜ.,வினரை போலீசார் கைது செய்தனர்.காங்., கட்சியைச் சேர்ந்த சாம் பிட்ரோடோ, அண்மையில் இந்தியர்களை பல்வேறு வெளிநாட்டினருடன் ஒப்பிட்டு, நிற வெறியை வெளிப்படுத்தும் விதமாக ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அவரது இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அவரைக் கண்டித்து, திருப்பூரில் நேற்று மாலை பா.ஜ., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ரயில்வே ஸ்டேஷன் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, மாவட்ட தலைவர் செந்தில்வேல், மாநில நிர்வாகிகள் மலர்க்கொடி, செல்வகுமார், சின்னசாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். காங்., கட்சியைக் கண்டித்தும் சாம் பிட்ரோடோவைக் கண்டித்தும் அவர்கள்கோஷமிட்டனர்.
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, அவர்களை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பா.ஜ.வினர் தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.