/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு போலீஸ் பாதுகாப்பு வழங்குங்கள்'
/
'கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு போலீஸ் பாதுகாப்பு வழங்குங்கள்'
'கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு போலீஸ் பாதுகாப்பு வழங்குங்கள்'
'கீழ்பவானி கால்வாய் சீரமைப்பு போலீஸ் பாதுகாப்பு வழங்குங்கள்'
ADDED : ஆக 05, 2024 11:55 PM

திருப்பூர்:கால்வாய் சீரமைப்பு பணி தடையின்றி நடக்க, போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என, கீழ்பவானி முறை நீர்பாசன விவசாயிகள் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையில் இருந்து, பாசனத்துக்கு செல்லும் கீழ்பவானி கால்வாய் சீரமைப்புக்கு, 709 கோடி ரூபாய் ஒதுக்கி, 2020 முதல் பணி நடந்து வந்தது. இப்பணிக்கு தடை விதிக்ககோரி, ஒருதரப்பு விவசாயிகள் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
விசாரித்த ஐகோர்ட், சீரமைப்பு பணியை, 2026 டிச., மாத இறுதிக்குள் முடிக்க உத்தரவிட்டுள்ளது. சில இடங்களில், ஒருதரப்பு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவிப்பதால், போலீஸ் பாதுகாப்புடன் பணியை மேற்கொள்ள, கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
கோர்ட் உத்தரவை நிறைவேற்ற வேண்டும் என, திருப்பூர் கலெக்டர் மற்றும் போலீஸ் எஸ்.பி.,யிடம் நேற்று கீழ்பவானி முறை நீர்பாசன விவசாயிகள் கூட்டமைப்பினர் முறையிட்டனர்.
அவர்கள் கூறுகையில், 'மங்கலப்பட்டியில் இருந்து பிரியும் கிளை கால்வாய் பணிகளை தடுத்தவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். கோர்ட் உத்தரவிட்டுள்ளபடி, ஆக., 15ல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கும் வகையில், போலீஸ் பாதுகாப்புடன் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளோம். வாய்க்கால் பணியில் தாமதம் ஏற்பட்டால், ஆக., 15ல் பாசனத்துக்கு தண்ணீர் திறக்க முடியாத சூழல் ஏற்படும்' என்றனர்.