ADDED : மே 11, 2024 12:05 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்:தன்னார்வ அமைப்புகள் சார்பில் மாநகராட்சி பள்ளிகளுக்கு இன்சினிரேட்டர் கருவிகள் வழங்கப்பட்டது.
'இனி ஒரு விதி செய்வோம்' அமைப்பு, திருப்பூர் லேடீஸ் சர்க்கிள் - 44 ஆகியன சார்பில், மாநகராட்சி பள்ளிகளுக்கு இன்சினிரேட்டர் கருவிகள் வழங்கப்பட்டது. கே.வி.ஆர்., நகர் உயர்நிலைப் பள்ளி மற்றும் கருவம்பாளையம் உயர்நிலைப் பள்ளி ஆகிய பள்ளிகளின் மாணவியர்க்கு பயன்படும் வகையில் இக்கருவிகள் வழங்கப்பட்டது.
இவற்றை அமைப்பு நிர்வாகிகள் கவிதா, ரம்யா மற்றும் இலக்கியா ஆகியோர், மாநகராட்சி கமிஷனர் பவன்குமாரிடம் வழங்கினர். மாநகர நல அலுவலர் கவுரி சரவணன், பள்ளி தலைமையாசிரியர் விஜயலட்சுமி ஆகியோர் உடனிருந்தனர்.