/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கனவு இல்ல திட்டத்தி்ல் வீடுகள் கட்ட நிதி வழங்கல்
/
கனவு இல்ல திட்டத்தி்ல் வீடுகள் கட்ட நிதி வழங்கல்
ADDED : ஆக 12, 2024 01:38 AM

உடுமலை;உடுமலை சின்ன வீரம்பட்டியில், நான்கு ஒன்றியங்களைச்சேர்ந்த பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
இதில், அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், விழாவில் உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம், தாராபுரம் ஒன்றிய கிராமங்களைச்சேர்ந்த, 461 பேருக்கு, 9.77 கோடி ரூபாய் மதிப்பில், கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் வீடுகள் கட்டவும், ஊரக குடியிருப்புகள் பழுது பார்த்தல் திட்டத்தின் கீழும் பயனாளிகளுக்கு பணி ஆணைகளை அவர்கள் வழங்கினர்.
திருப்பூர் மாவட்ட ஊரக வளச்சி திட்ட இயக்குனர் மலர்விழி, உடுமலை கோட்டாட்சியர் ஜஸ்வந்த் கண்ணன், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரிகள், ஒன்றியக்குழு தலைவர்கள் ஊராட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.