/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆசிரியர்களுக்கு டேப்லெட்கள் வழங்கல்
/
ஆசிரியர்களுக்கு டேப்லெட்கள் வழங்கல்
ADDED : ஜூலை 02, 2024 02:25 AM

உடுமலை;மடத்துக்குளம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு டேப்லெட் தொழில்நுட்ப சாதனம் வழங்கப்பட்டன.
அரசு பள்ளிகளில் மாணவர்களுக்கு நிகழ்கால எடுத்துகாட்டுகளுடன் பாடம் நடத்துவதற்கும், தொழில்நுட்ப வளர்ச்சியின் வாயிலாக, மாணவர்களின் திறன்களை மேம்படுத்தவும், ஆசிரியர்களுக்கு 'டேப்லெட்' எனப்படும் கையடக்க கம்ப்யூட்டர்கள் வழங்கப்படுகின்றன.
இதை பயன்படுத்தி ஆசிரியர்கள் மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடங்கள் கற்றுத்தருகின்றனர். மேலும் ஆன்லைன் தேர்வுகளும் இதன் வாயிலாக பள்ளிகளில் நடத்தப்படுகிறது.
நடப்பாண்டில் பள்ளிகளுக்கு வினியோகிக்கப்படும் டேப்லெட்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மடத்துக்குளம் வட்டாரத்திலுள்ள உள்ள அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, டேப்லெட்கள் வழங்கும் நிகழ்ச்சி வட்டார கல்வி அலுவலகத்தில் நேற்று நடந்தது.
வட்டார கல்வி அலுவலர்கள் சரவணன், பழனிசாமி டேப்லெட்களை வழங்கினர். துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் 48 பேர், 92 இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.