/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீர் சுத்திகரிப்பு கருவி பயன்பாட்டுக்கு வழங்கல்
/
குடிநீர் சுத்திகரிப்பு கருவி பயன்பாட்டுக்கு வழங்கல்
குடிநீர் சுத்திகரிப்பு கருவி பயன்பாட்டுக்கு வழங்கல்
குடிநீர் சுத்திகரிப்பு கருவி பயன்பாட்டுக்கு வழங்கல்
ADDED : ஜூலை 02, 2024 01:43 AM

திருப்பூர்:திருப்பூர் தெற்கு ரோட்டரி சார்பில் குடிநீர் சுத்திகரிப்பு கருவி பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டது. திருப்பூர் தெற்கு ரோட்டரி சார்பில், திருப்பூர் நகரப் பகுதியில் 15 இடங்களில் சுத்தி கரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் வகையில் கருவிகள் அமைக்கும் திட்டம் துவங்கப்பட்டுள்ளது.
தெற்கு ரோட்டரி ஹால் முன்புறம் அமைக்கப்பட்டுள்ள இக்கருவி பயன்பாட்டுக்கு திறக்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. மேயர் தினேஷ்குமார் இதை திறந்து வைத்தார். துணை மேயர் பாலசுப்ரமணியம், கமிஷனர் பவன்குமார் முன்னிலை வகித்தனர்.ரோட்டரி சங்க நிர்வாகிகள் மோகனசுந்தரம், மோகன் ராஜ், ராம்குமார் பாலாஜி, முன்னாள் நிர்வாகி சக்திவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.