/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மதுக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
/
மதுக்கடை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு
ADDED : மே 28, 2024 12:45 AM
திருப்பூர்:திருப்பூர், கருப்பகவுண்டன்பாளையத்தில் பாருடன் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் புகார் மனு அளித்தனர்.
இதுதொடர்பாக, கருப்பகவுண்டன்பாளையம், கல்லாங்காடு உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.
அதில், 'திருப்பூர் பல்லடம் ரோட்டில் இருந்து கருப்பகவுண்டன்பாளையம் செல்லும் பிரதான ரோட்டில் பாருடன் கூடிய மதுக்கடை செயல்பட அனுமதி அளித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த ரோட்டை அன்றாடம் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், பெண்கள் பயணிக்க கூடிய ரோடாக உள்ளது. ஓடை அமைந்துள்ள காரணத்தினால், அதன் சுற்றுச்சூழல் சுகாதார சீர்கேடு ஏற்படும். எனவே, அனைவரின் பாதுகாப்பு கருதி, மதுக்கடை அமைக்கக்கூடாது. இதற்கான அனுமதியை ரத்து செய்ய வேண்டும்,' என்று கூறப்பட்டுள்ளது.