/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குடிநீர் கிடைக்காததால் பொதுமக்கள் மறியல்
/
குடிநீர் கிடைக்காததால் பொதுமக்கள் மறியல்
ADDED : மே 18, 2024 12:05 AM
திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சி, 40வது வார்டு இடுவம்பாளையம் ரோடு, வஞ்சிபாளையம் பிரிவு ஆகிய பகுதிகளில் குடிநீர் சப்ளை செய்து, 15 நாள் ஆகிறது.
இதனால், அவதிப்பட்ட பொதுமக்கள் நேற்று காலை, வஞ்சிபாளையம் பிரிவு பகுதியில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சென்ற வீரபாண்டி போலீசார் மக்களுடன் பேச்சு நடத்தி, மறியலை கைவிட செய்தனர்.
மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், 'குழாய் சேதம் காரணமாக குடிநீர் சப்ளையில் சிறிது தாமதம் ஏற்பட்டது. சேதமான குழாய்கள் உடனுக்குடன் சரி செய்தாலும், வேறு இடங்களில் சேதம் ஏற்பட்டு குடிநீர் சப்ளை பாதிக்கப்பட்டது.
இருப்பினும், லாரியில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. குழாய் உடைப்புகள் முழுமையாக ஒரு நாளில் சரி செய்து குடிநீர் சப்ளை வழக்கம்போல் மேற்கொள்ளப்படும்,' என்றனர்.

