/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பருப்பு, பாமாயில் ரேஷனில் பெறலாம்
/
பருப்பு, பாமாயில் ரேஷனில் பெறலாம்
ADDED : ஜூன் 08, 2024 11:56 PM
திருப்பூர் ;திருப்பூர் மாவட்டத்தில் உள்ள, ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. துவரம் பருப்பு, பாமாயில், சர்க்கரை போன்றவை மானிய விலையில் வழங்கப்படுகிறது. டெண்டர் தாமதம் ஏற்பட்டதால், கடந்த மே மாதம், துவரம் பருப்பு மற்றும் பாமாயில் ஒதுக்கீடு தாமதமானது.
ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் மட்டும் வழங்கப்பட்டன. ஒவ்வொரு கடையிலும், ஏராளமான கார்டுதாரர்களுக்கு பருப்பு மற்றும் பாமாயில் கிடைக்கவில்லை.
அவ்வாறு, கடந்த மே மாதம் பருப்பு மற்றும் பாமாயில் கிடைக்காத கார்டுதாரர்கள், கடந்த மாத ஒதுக்கீட்டை, இம்மாதம் பெற்றுக்கொள்ளலாம்; வழக்கம் போல், ஜூன் மாத ஒதுக்கீட்டையும் பெற்றுக்கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

