/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விளைநிலத்தில் இருந்து மலைப்பாம்பு மீட்பு
/
விளைநிலத்தில் இருந்து மலைப்பாம்பு மீட்பு
ADDED : பிப் 23, 2025 11:52 PM

உடுமலை; உடுமலை அருகே, விளைநிலத்தில் காணப்பட்ட மலைப்பாம்பை வனத்துறையினர் மீட்டு அடர் வனப்பகுதியில் விடுவித்தனர்.
உடுமலை அருகே எலையமுத்துார் செல்வபுரம் பகுதியில் விளைநிலத்தையொட்டி கால்நடைகளை மேய்க்க சென்றவர்கள் அப்பகுதியில், மலைப்பாம்பு இருப்பதை பார்த்தனர்.
இது குறித்து அமராவதி வனச்சரக அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அமராவதி வனச்சரக அலுவலர் புகழேந்தி தலைமையில், 11 பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு, சுமார் 13 அடி நீள மலைப்பாம்பு இருப்பதை பார்த்து அதை மீட்டனர். பின்னர், அடர் வனப்பகுதியில் அந்த பாம்பு விடப்பட்டது. விளைநிலத்தில் இருந்து மலைப்பாம்பு மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

