ADDED : ஜூன் 20, 2024 05:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் ; திருப்பூர் மாநகர மாவட்ட காங்., சார்பில், கட்சியின் முன்னாள் தலைவர், எம்.பி., ராகுல், 54வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
பெரியபாளையம் கருணை இல்லத்தில் கேக் வெட்டப்பட்டது. அங்குள்ளவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. நல்லுார் விஸ்வேஸ்வரர், விசாலாட்சியம்மன் கோவிலில் ராகுல் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டு, கட்சியினர் வழிபாடு செய்தனர். பக்தர்களுக்கு லட்டு வழங்கப்பட்டது. மாநகர மாவட்ட தலைவர் கிருஷ்ணன் தலைமை வகித்தார். பொதுக்குழு உறுப்பினர்கள் ஈஸ்வரன், கோபால்சாமி மற்றும் வட்டார, கிளை தலைவர்கள், பொறுப்பாளர்கள் பலர் பங்கேற்றனர்.