/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
திருப்பூர் ஊரக வளர்ச்சி அலுவலகத்தில் 'ரெய்டு'; கணக்கில் வராத ரூ.1.02 லட்சம் பறிமுதல்

ADDED : ஆக 08, 2024 12:33 AM

திருப்பூர்: திருப்பூரில் ஊரக வளர்ச்சித்துறை முகமை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்பு துறையினர் மேற்கொண்ட திடீர் சோதனையில், கணக்கில் வராத பணம் 1.02 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பூர், கோர்ட் வீதியில் ஊரக வளர்ச்சி துறை முகமை உதவி செயற்பொறியாளர் அலுவலகம் உள்ளது. இங்கு ஊராட்சிகளில் நடந்து முடிந்த வளர்ச்சி பணிகளுக்கு 'பில்'களை அனுமதிக்க, ஒப்பந்ததாரர்களிடம் லஞ்சம் கேட்பதாக புகார் எழுந்தது.
மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறை டி.எஸ்.பி., (பொறுப்பு) ராஜேஷ் தலைமையில் இன்ஸ்பெக்டர் சசிலேகா அடங்கிய குழுவினர் உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில், நேற்றிரவு, 7:00 மணிக்கு திடீர் சோதனை மேற்கொண்டனர்.
உதவி செயற்பொறியாளர் தர்மலிங்கத்திடம் இருந்து, 86 ஆயிரம் ரூபாய், உதவி பொறியாளர் சிவராஜிடம் இருந்து, 16 ஆயிரத்து 300 ரூபாய் என, ஒரு லட்சத்து, 2 ஆயிரத்து, 300 ரூபாய் கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்தனர். கைப்பற்றப்பட்ட பணம் குறித்து விசாரணை நடக்கிறது.