ADDED : மே 31, 2026 08:02 PM

அ நிறம் | அளவு
உடுமலை: பருவமழை துவங்கும் முன், மழை நீர் வடிகால் பணிகளை நகராட்சி நிர்வாகத்தினர் நிறைவு செய்ய, மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உடுமலை நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. பிரதான மழை நீர் வடிகால்களாக, கழுத்தறுத்தான் பள்ளம், தங்கம்மாள் ஓடை அமைந்துள்ளது. இந்த இரு ஓடைகளுக்கும் குடியிருப்புகளில் உள்ள வடிகால்கள் வழியாக, மழை நீர் செல்கிறது.
தற்போது நகராட்சியால், பல்வேறு குடியிருப்புகளில், மழை நீர் வடிகால்கள் புதுப்பிப்பு பணி நடக்கிறது. இப்பணிகள் சில மாதங்களுக்கு முன் துவங்கி இழுபறியாக நடந்து வருகிறது.
விரைவில் தென்மேற்கு பருவமழை சீசன் துவங்க உள்ள நிலையில், வடிகால் பணிகளை நிறைவு செய்ய வேண்டும் என, மக்கள் வலியுறுத்தியுள்ளனர். இல்லாவிட்டால், குடியிருப்புகளில், மழை நீர் தேங்குவது உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புள்ளது.
