ADDED : மார் 03, 2025 05:18 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், : திருப்பூர் சுற்றுப்பகுதிகளில் உள்ள இஸ்லாமியர்கள், ரமலான் நோன்பை நேற்று முதல் துவக்கியுள்ளனர்.
ஒவ்வொரு ஆண்டும், ரமலான் மாதத்தில், இஸ்லாமிய மக்கள் நோன்பு கடைபிடிப்பது வழக்கம். ரமலான் மாத பிறப்பான நேற்றுமுதல், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இஸ்லாமியர்கள்,ரமலான் நோன்பை துவக்கியுள்ளனர். ரமலான் மாதத்தில், அதிகாலை நேரம் துவங்கி, மாலை வரை, எதுவும் சாப்பிடாமல் நோன்பு இருப்பர்; பின்னர் மசூதியில் சிறப்பு தொழுகை நடத்தி, நோன்பு திறப்பு நடத்துகின்றனர். அதற்கு பிறகே, கஞ்சி போன்ற உணவை சாப்பிடுகின்றனர்.
நேற்று முதல் ரமலான் நோன்பு துவங்கியுள்ளனர். திருப்பூர் நகரப்பகுதியில் உள்ள மசூதிகளில், நேற்று இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகை நடத்தி, நோன்பு திறந்தனர்.
மாதம் முழுக்க இதேபோன்று நோன்புவிரதத்தை இஸ்லாமியர் கடைபிடிப்பர்.