ADDED : மே 31, 2026 03:52 PM
அ நிறம் | அளவு
உடுமலை: தமிழக அரசு சார்பில், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரடியாக சென்று ரேஷன் பொருட்கள் வினியோகம் மேற்கொள்ளும் தாயுமானவர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், நாளையும் (1ம் தேதி) நாளை மறுநாளும் (3ம் தேதி), ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கு நேரடியாக வந்து, ஊழியர்களால் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை பயன்படுத்திக்கொள்ளுமாறு, கூட்டுறவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
