ADDED : ஆக 11, 2024 10:54 PM
திருப்பூர்:மா.கம்யூ., வேலம்பாளையம் நகர செயலாளர் நந்தகோபால் அறிக்கை:
ரேஷன் கடையில் புழுங்கல் அரிசி வழங்கும் போது, பச்சரியும் வாங்க கட்டாயப்படுத்துகின்றனர். ஒவ்வொரு கடைகளிலும், வேறுவேறு தரத்துடன் அரிசி வழங்கப்படுகிறது. கார்டுகள் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒதுக்கீடு செய்வதில்லை.வெளிமாநில கார்டுதாரர்களுக்கு, 18ம் தேதிக்கு பின்னரே அரிசி, கோதுமை வழங்குகின்றனர்; முன்கூட்டியே வழங்க வேண்டும். ரேஷன் கடைகளில் போதிய பணியாளர் இல்லை; காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
ரேஷன் கடைகளில், தரமான பொருட்களை, சரியான அளவில் வழங்க வேண்டும். அனைத்து நாட்களும், அனைத்து பொருட்களும் தடையின்றி வழங்குவதை உறுதி செய்ய வேண்டும்.ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெளி மாவட்ட, வெளி மாநில கார்டுதாரர்களுக்கு, தேவையான பொருட்களை தடையின்றி வழங்க வேண்டும். முழு நேரக் கடையை பகுதி நேர கடையாக மாற்றுவதை கைவிட வேண்டும். கடைகள் எண்ணிக்கைக்கு ஏற்ப, பணியாளர்களை நியமிக்க வேண்டும்; காலிப்பணியிடத்தை நிரப்ப வேண்டும்.
