/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
இருள் சூழ்ந்த ராயபுரம் தவிக்கும் வாகன ஓட்டிகள்
/
இருள் சூழ்ந்த ராயபுரம் தவிக்கும் வாகன ஓட்டிகள்
ADDED : ஜூலை 06, 2024 10:42 PM

திருப்பூர்:ராயபுரம் பகுதியில் தெரு விளக்குகள் நீண்ட நாட்களாக எரியாமல் இருள் சூழ்ந்து இருப்பதால், பெரும் அவதி நிலவுகிறது.
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பிரதான குடியிருப்பு பகுதியாக ராயபுரம் உள்ளது. காதர்பேட்டை பனியன் பஜார் கடைகள் உள்ளிட்ட ஏராளமான கடைகள் இப்பகுதியில் உள்ளன. நஞ்சப்பா பள்ளி ரோடு வழியாக, ராயபுரம் பூங்கா, ரவுண்டானா, கோவில்கள், குடியிருப்பு பகுதிகள், ஸ்டேட் பாங்க் காலனி, சின்னான் நகர், விநாயகபுரம், சூசையாபுரம், கல்லாம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் செல்லும் முக்கியமான ரோடாக உள்ளது.
இந்த ரோட்டில் ரவுண்டானா பகுதியில் உயர் மின் கோபுர விளக்கும், ரோட்டின் மையப் பகுதியில் எல்.இ.டி., தெரு விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த சில நாட்களாக இந்த தெரு விளக்குகள் எதுவுமே எரியாமல் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்துக்கு தகவல் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்கின்றனர் அப்பகுதியினர்.
---