/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வாசிப்பு பழக்கம் கைகூட புது முயற்சி
/
வாசிப்பு பழக்கம் கைகூட புது முயற்சி
ADDED : ஜூன் 12, 2024 10:44 PM

திருப்பூர் : வெள்ளகோவில் வட்டாரத்தில், பொதுமக்கள் மத்தியில் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில், அன்பு சுவரில் தினசரி நாளிதழ் ஸ்டாண்ட் துவக்கப்பட்டது.
வெள்ளகோவில் அன்பு தேசம் அறக்கட்டளையின், 500 வது நாளை முன்னிட்டு, அன்பு சுவரில் பொதுமக்கள், பயணிகள் இடையே வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், தினசரி நாளிதழ் ஸ்டாண்ட் துவக்கப்பட்டது.
அறக்கட்டளை நிறுவனர் நாகராஜ், செயலாளர் கண்ணன், துணை செயலாளர் சதீஷ்குமார் முன்னிலையில், ரோட்டரி கிளப் நிர்வாகிஜலாவுதீன் மற்றும் கட்டட கலைஞர்கள் நல சங்க நிர்வாகி கண்ணன் ஆகியோர் திறந்து வைத்தார்.
நிகழ்ச்சியில், தேசம் காப்போம் அறக்கட்டளை நிர்வாகி பாலசுப்ரமணியம், நிழல்கள் அறக்கட்டளை நிர்வாகி நாகராஜ், அரசு மருத்துவமனை சுகாதார ஆய்வாளர் கதிரவன், நகராட்சிசுகாதார ஆய்வாளர் செல்வராஜ், வக்கீல் கந்த சரவணன் உட்பட பலர் பங்கேற்றனர்.