ADDED : ஆக 11, 2024 01:11 AM
அ நிறம் | அளவு
திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி வடக்கு பகுதிக்கான பாதாள சாக்கடை திட்ட சுத்திகரிப்புமையம் எஸ்.பெரியபாளையத்திலும், தெற்கு பகுதியில் ஆண்டிபாளையம் பிரிவு பகுதியிலும் அமைக்கப்பட்டுள்ளது.
ஆண்டிபாளையம் பிரிவில் அமைக்கப்பட்டுள்ள சுத்திகரிப்பு மையத்தில் சோதனை ஓட்டம் நடைபெற்று வருகிறது. இதனை மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் நேரில் சென்று பார்வையிட்டார். புதிய திருப்பூர் மேம்பாட்டு கழக அலுவலர் சரவணன், மாநகர துணை பொறியாளர் கண்ணன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.மாநகராட்சி பகுதியில், மழைக்காலத்தை முன்னிட்டு, ஓடைகள் துார்வாரும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவ்வகையில், 1வது வார்டு, பிரியங்கா நகரில் உள்ள ஓடையில் துார் வாரும் பணிகளை கமிஷனர் ஆய்வு செய்து, விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
