/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தோட்டக்கலைத்துறை சிறப்பு முகாம் மானிய திட்டங்களில் விவசாயிகள் பதிவு
/
தோட்டக்கலைத்துறை சிறப்பு முகாம் மானிய திட்டங்களில் விவசாயிகள் பதிவு
தோட்டக்கலைத்துறை சிறப்பு முகாம் மானிய திட்டங்களில் விவசாயிகள் பதிவு
தோட்டக்கலைத்துறை சிறப்பு முகாம் மானிய திட்டங்களில் விவசாயிகள் பதிவு
ADDED : ஜூலை 01, 2024 02:33 AM

உடுமலை;மடத்துக்குளம் வட்டாரத்தில், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ், பாப்பான்குளம் கிராமம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இக்கிராமத்தில், அரசு துறைகள் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் மற்றும் விவசாயிகள் பங்கேற்பது குறித்து சிறப்பு முகாம் நடந்தது.
தோட்டக்கலை உதவி இயக்குனர் சுரேஷ்குமார், கால்நடைத்துறை, ஒழுங்குமுறை விற்பனை கூடம் மற்றும் வேளாண் விற்பனை அலுவலர்கள் பங்கேற்றனர்.
தோட்டக்கலை அலுவலர் காவியா தீப்தினி, 'தென்னையில் ஏற்படும் வேர் வாடல் நோய் அறிகுறிகள் மற்றும் ஆடிப்பட்டத்தில் காய்கறி சாகுபடி மேற்கொள்ளும் போது, மேற்கொள்ள வேண்டிய தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார்.
உதவி தோட்டக்கலை அலுவலர் தாமோதரன், தோட்டக்கலைத் துறை வாயிலாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பேசினார்.
உதவி தோட்டக்கலை அலுவலர் நித்யராஜ், முகாமில் பங்கேற்ற விவசாயிகளுக்கு தேவையான திட்டங்களை பதிவு செய்து, திட்டங்கள் நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான ஆவணங்கள் குறித்து விளக்கினார்.
இம்முகாமில், நுண்ணீர் பாசனம் அமைக்க, 8 விவசாயிகளும், வெங்காய பட்டறை அமைக்க, 18 விவசாயிகளும், தென்னைக்கு தேவையான உரங்களைப் பெற, 7 விவசாயிகளும், நீர் சேமிப்பு கட்டமைப்பு அமைக்க, 3 விவசாயிகளும், காய்கறி நாற்றுகள் மானியத்தில் பெற, 5 விவசாயிகளும், காய்கறி பந்தல் அமைக்க, 2 விவசாயிகளும் பதிவு செய்தனர்.