ADDED : மே 09, 2024 11:31 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை;உடுமலை உழவர்சந்தை ரோட்டில், காலையில் அமைக்கப்படும் தற்காலிக கடைகளை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை ரயில்வே ஸ்டேஷன் அருகில் உழவர்சந்தை உள்ளது. இங்கு தினமும் நுாற்றுக்கணக்கான விவசாயிகள், காய்கறிகளை கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். பொதுமக்களும் ஏராளமானோர் வருகின்றனர்.
உழவர் சந்தையின் வெளியில், சிலர் திறந்த வெளியில் கடைகள் அமைத்து விற்பனை செய்கின்றனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே, இந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.