/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேர்தல் பணி அலுவலர்களுக்கு ஊதியம்: தேர்தல் கமிஷன் நிர்ணயம்
/
தேர்தல் பணி அலுவலர்களுக்கு ஊதியம்: தேர்தல் கமிஷன் நிர்ணயம்
தேர்தல் பணி அலுவலர்களுக்கு ஊதியம்: தேர்தல் கமிஷன் நிர்ணயம்
தேர்தல் பணி அலுவலர்களுக்கு ஊதியம்: தேர்தல் கமிஷன் நிர்ணயம்
ADDED : ஏப் 18, 2024 11:04 PM
உடுமலை;லோக்சபா தேர்தலில், ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கை பணிக்கு நியமிக்கப்பட்ட ஊழியர்களுக்கு, மதிப்பூதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு, இன்றும் (19ம் தேதி), ஜூன் 4ம் தேதி ஓட்டு எண்ணிக்கையும் நடக்கிறது.
ஓட்டுப்பதிவு மற்றும் ஓட்டு எண்ணிக்கையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு, வழங்க வேண்டிய மதிப்பூதியம் குறித்து, அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கும் தலைமை தேர்தல் கமிஷன் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
அதன் விபரம்:
ஓட்டுப்பதிவு அலுவலர்கள்
ஓட்டுச்சாவடிகளில் பணியாற்றும் ஓட்டுச்சாவடி தலைமை அலுவலர் - 1,700 ரூபாய். ஓட்டுச் சாவடி 1,2,3 மற்றும் 4 அலுவலர்கள் - ரூ. 1,300. ஓட்டுப்பதிவு பணி உதவியாளர் - ரூ. 700 வழங்க அறிவுறுத்தியுள்ளது.
ஓட்டு எண்ணிக்கை பணி
ஓட்டு எண்ணிக்கையின் போது, எண்ணிக்கை மேற்பார்வையாளர் - 850. உதவியாளர் - 650. அலுவலக உதவியாளர் 350 ரூபாய். நுண்பார்வையாளர் - 1,000 ரூபாய் (ஓட்டுப்பதிவு). எண்ணிக்கை பணி - 450. மண்டல அலுவலர் - 1500. உதவி மண்டல அலுவலர் - 1000. வரவேற்பு அலுவலர், காசாளர், உதவி காசாளர், வி.ஏ.ஓ., - 800. கிராம உதவியாளர், அலுவலக உதவியாளர் பிற ஊழியர்கள் - 700 ரூபாய்.
இந்த ஊதிய விகிதங்களின்படி, தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கி, அதற்கான பட்டியலையும் ஓட்டு எண்ணிக்கை முடிந்த ஒரு வாரத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
அறிவுறுத்தப்பட்ட ஊதியத்துக்கு மேல் வழங்கப்பட்டால், அதற்கு உரிய மாவட்ட தேர்தல் அலுவலர் பொறுப்பேற்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேவைக்கேற்ப பெறப்பட்ட தொகை, செலவு விபரம் மற்றும் மீத தொகையை அரசுக்கணக்கில் செலுத்தியதற்கான விபரங்களை தேர்தல் நடத்தைகள் முடிவுக்கு வந்து, 15 நாட்களுக்குள் அளிக்க வேண்டும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

